by Admin

யதார்த்தம் செய்திகள் - ஓர் அறிமுகம் !

செய்தித்தாள்கள் உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகளைக் கொண்டு செல்கின்றன. செய்தித்தாள்கள் தகவல்களையும் பொது அறிவையும் வழங்குகின்றன. செய்தித்தாள்கள் ஒரு நாட்டின் பொருளாதார நிலைமை, விளையாட்டு, விளையாட்டு, பொழுதுபோக்கு, வர்த்தகம் மற்றும் வர்த்தகம் பற்றிய செய்திகளை வழங்குகின்றன. ஒரு செய்தித்தாளைப் படிப்பது ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்துகிறது, அது ஏற்கனவே நவீன வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்.

இணையப் பரப்பில் முக்கியமாகக் கருதத்தக்கது இணைய இதழ்கள் ஆகும். இணையத்தில் மட்டுமே இடம் பெறும் இதழ்களை இணைய இதழ்கள் என்று குறிப்பிட வேண்டும். பேரறிமுக தமிழ் நாளிதழ்கள், தமிழ் கிழமை இதழ்கள் அனைத்தும் இணைய முகவரியைப் பெற்றுள்ளன. இருப்பினும் இவற்றை இணைய இதழ்கள் எனக் கருதமுடியாது. இணையத்தில் மட்டுமே செய்திகளைத் தருகின்ற இதழ்களே இணைய இதழ்கள் எனப்படும்.

அவ்வகையில், மக்களுக்கான செய்திகளை இணையத்தில் வழங்கும் யதார்த்தம் செய்திகளும், ஓர் இணைய நாளிதழ் ஆகும். யதார்த்தம் செய்திகள் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு செய்திகள், அரசியல், சினிமா, கல்வி, சட்டம், சமயம் போன்ற தலைப்புகளில் வழங்குகிறது.

யதார்த்தம் செய்திகளின் நிறுவன தலைவர் திரு. லூர்து சேவியர் அவர்கள். அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் காண்போம்.

நிறுவன தலைவர் - திரு. லூர்து சேவியர் அவர்கள்,

Mr. S. Lourdu Xavier, B.A., LLB, M.Sc