2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி( ஜோ சல்டானா) ஸ்கை மக்களிடம் இருந்து தங்கள் குழந்தைகளை காக்க அனைத்தும் செய்கிறார்கள்.
பல ஆண்டுகள் கழித்து வெளியானாலும் அதே பிரமிப்பு, அதே பூரிப்பு ஏற்படுகிறது. பெற்றோர், குழந்தைகள் என்கிற சாதாரண கதையை எடுத்துக் கொண்டு அதை ஜேம்ஸ் கேமரூன் படமாக்கிய விதம் தான் கைதட்டல்களை பெறுகிறது. இனம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்தும் ஆகியவற்றையும் படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
குழந்தைகளை பெற்றார் பாதுகாப்பது குறித்த கிளைமாக்ஸ் அருமை. காடுகள், கடல் என்று இரண்டிலுமே ரசிகர்களை ஈர்க்கிறார் ஜேம்ஸ் கேமரூன். தியேட்டருக்குள் நுழைந்த மூன்று மணிநேரம் ஏதோ வேறு ஒரு உலகத்திற்கு சென்று வாழ்ந்த அனுபவம் ஏற்படுகிறது. பல ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் போதிலும் இந்த இரண்டாம் பாகத்திலும் ஆக்ஷனும், எமோஷனும் குறைவில்லை.
சிம்பிளான கதையை எடுத்துக் கொண்டு அதை காட்சிப்படுத்திய விதத்தில் மாறுபட்டு நிற்கிறார் ஜேம்ஸ் கேமரூன். படம் ஓடும்போது ஒரு இடத்தில் கூட தொய்வு ஏற்படவில்லை. முதல் பாகத்தில் இருந்த அதே மேஜிக் இரண்டாம் பாகத்திலும் இருக்கிறது.
13 ஆண்டுகள் கழித்து வருகிறதே இரண்டாம் பாகம் எப்படி இருக்குமோ என்று பேசப்பட்ட நிலையில், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் வேற லெவலில் இருக்கிறது. இந்த ஆண்டின் சிறப்பான சினிமா அனுபவம் அவதார் 2 என்று கூறலாம்.
அவதார் 2- கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.