திண்டிவனம் போலீஸ் அதிகாரிகளை கைது செய்யக்கோரி செஞ்சியில் பேரணி, சி.பி.ஐ.விசாரணைக்கும் உத்தரவிடவேண்டும்
விழுப்புரம் சாலையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு வக்கீல் கோதண்டம் தலைமை தாங்கினார். செஞ்சி லாரன்ஸ் வரவேற்றார். சென்னையைச் சேர்ந்த ரீட்டா மேரி கற்பழிப்பு தொடர்பாக திண்டிவனம் போலீஸ் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் மற்றும் இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி செஞ்சியில் பேரணி நடந்தது.
செஞ்சி கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப் பட்ட சென்னையைச் சேர்ந்த ரீட்டாமேரி கற்பழிக்கப் பட்டது தொடர்பாக செஞ்சியில் அம்பேத்கர் முற்போக்கு இளைஞர் இயக்கம் மற்றும் பொது மக்கள் சார்பில் பேரணி நடந்தது. செஞ்சி மாதா கோவில் அருகே புறப்பட்ட பேரணி கடைவீதி வழியாக கூட்டுரோட்டில் முடிவடைந்தது. பேரணியை அந்தோணிமேரி தொடங்கி வைத்தார். லூர்து சேவியர் தலைமை தாங்கினார்.
கோரிக்கைகள்
மேரியை கடத்தி விற்ற ஆத்தூர் போலீஸ்காரர் முருகேசன், ரீட்டாவை விபசாரத்தில் ஈடு படுத்திய சாந்தி, அவர் மீது பொய் வழக்கு போட்ட திண்டி வனம் போலீஸ் அதிகாரிகள் ராஜ் குமார், முகமதுநசீர் மற்றும் ராஜேந்திரன், சிறையில் கற்பழித்ததாக கூறப்படும். சிறைக் காவலர்களையும் உடனே கைது செய்யவேண்டும். இது தொடர்பாக விசாரணைக்கு உத்திரவிடவேண்டும், பாதிக்கப்பட்ட ரீட்டாமேரிக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் தரவேண்டும். அவருக்கு அரசு வேலை தரவேண்டும்,
ரமேஷ்நாதன், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சாத்தி, லெனின், மதுரை சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் தகவல் அறிய:
CLICK HERE