Home » செய்திகள் » கண்டன அறிக்கை – நீதிமன்றக் காவலில் ரீட்டாமேரி கற்பழிப்பு

கண்டன அறிக்கை – நீதிமன்றக் காவலில் ரீட்டாமேரி கற்பழிப்பு

by Admin

காப்பாற்ற முயன்ற சென்னை இளைஞர்களுக்கு திண்டிவனம் காவல் நிலையத்தில் சித்திரவதை – பொய் வழக்கு – சிறை – அபராதம் கண்டன அறிக்கை

தளி காவல் நிலையத்தில் கல்பனா சுமதி – சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பத்மினி – புதுச்சேரி போலீசாரால் அத்தியூரில் பழங்குடி இருளர் பெண் ‘விஜயா – முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் வசந்தா என காவல் நிலையத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்டதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தமிழக வரலாற்றில் முதல் முறையாக் நீதிமன்றக் காவலில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார் என்பது நம்மை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. திண்டிவனத்திலும் செஞ்சி சிறையிலும் ரீட்டாமேரிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஜூனியர் விகடன், நக்கீரன் வார இதழ்கள்- தினசரிகள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. தமிழக மக்களின் கவனம். திண்டிவனத்தை நோக்கி திரும்பியிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை தமிழகமே நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது..

திண்டிவனம் சாந்தியிடம் சிக்கிய ரீட்டாமேரி,

சென்னை, திருவெற்றியூர், எழுத்துக்காரன் தெருவைச் சேர்ந்த லீலாவதி சௌந்திராஜன் தம்பதியரின் கடைசி மகள்தான் ரீட்டாமேரி வயது 19 இவருக்கு சகோதரிகளும் 2ககோதரர்களும் உள்ளனர்.தன் தந்தையை இழந்த ரீட்டாமேரி தன். தாயுடன் அவருடைய சகோதரர் சாமுவேல் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு ரீட்டா தன் தாயுடன் ஈரோட்டில் இருக்கும் தழ்மூத்த சகோதரி மீதா வீட்டிற்கு சென்றுள்ளார். தன் அக்காவிடம் கோபித்துக்கொண்டு யாமும் சொல்லிக்கொள்ளாமல் 20-10-2001 அன்று ஈரோட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது வரும் வழியில் சிட்டாயேசி சேலம் ஆத்தூரில் முருகோன்,

முழு அறிக்கையை வாசிக்க:

CLICK HERE

Related Articles

Leave a Comment