Home » செய்திகள் » சட்டமாகிறதா வொர்க் ப்ரம் ஹோம்?

சட்டமாகிறதா வொர்க் ப்ரம் ஹோம்?

by Admin

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்னர் வொர்க் ப்ரம் ஹோம் என்ற வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை குறித்து பலர் அறிந்திருக்கவில்லை.   ஆனால் உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த நிலையில் பல ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் முறை அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அமல்படுத்தப்பட்ட இந்த நடைமுறை, தற்போது நிரந்தரமாக சட்டமாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது ஊழியர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

வொர்க் ப்ரம் ஹோம்

அலுவலகம் செல்வதற்காக காலை போக்குவரத்து நெருக்கடியில் சென்று, மிகுந்த அயர்ச்சியுடன் வேலையைத் தொடங்கும் ஊழியர்கள், அதன்பின் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு போக்குவரத்து நெருக்கடியில் வருவதற்குள் பெரும்பாடு ஆகிவிடுகிறது.

ராஜினாமா

எனவே கொரோனா வைரஸ் காலத்தில் வொர்க் ப்ரம் ஹோம் என்ற நடைமுறை அமலுக்கு வந்த போது பல ஊழியர்கள் இதனை விரும்பினார்கள் என்பதும் மீண்டும் அலுவலகத்திற்கு வரச் சொன்னபோது பல ஊழியர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்தார்கள் என்பதையும் பார்த்தோம்.

அரசு நிறுவனங்கள்

தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி ஒருசில அரசு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் என்ற வீட்டில் இருந்து வேலை முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தி இருந்தது.

தொழிலாளர் நல சட்டம்

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக வொர்க் ப்ரம் ஹோம் என்ற வசதியை அனுபவித்த ஊழியர்கள் நிரந்தரமாக அதனை பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வொர்க் ப்ரம் ஹோம் என்னும் நடைமுறையை தொழிலாளர் நல சட்ட உரிமையாக மாற்றுவதற்கு நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் சட்டமசோதா தாக்கல் செய்ய இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்ட மசோதா

நெதர்லாது நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் இந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்த விருப்பம் தெரிவித்து வருகின்றன. வரும் ஜூலை மாதம் நெதர்லாந்து நாட்டில் பாராளுமன்றம் கூடும் போது இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது செலவு மிச்சம் ஊழியர்கள் மட்டுமின்றி பல நிறுவனங்களும் வொர்க் ப்ரம் ஹோம் என்ற நடைமுறையை விரும்புவதாக கூறப்படுகிறது. வாடகை, மின்சர செலவு, இன்டர்நெட் செலவு, பராமரிப்புச் செலவு உள்ளிட்ட பல செலவுகள் வொர்க் ப்ரம் ஹோம் நடைமுறையினால் அதிக பணம் மிச்சம் ஆவதால் நிறுவனங்கள் இதை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

நெதர்லாந்து எனவே ஊழியர்கள் மற்றும் நிறுவன அதிபர்களின் கோரிக்கையை அடுத்தே இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளதாக நெதர்லாந்து நாட்டின் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா

நெதர்லாந்து நாட்டை அடுத்து இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த சட்டம் எதிர்காலத்தில் அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் வொர்க் ப்ரம் ஹோம் என்பது தொழிலாளர்களின் உரிமைகளில் ஒன்றாக மாற்றப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கூகுள் – டெஸ்லா

கூகுள், டெஸ்லா போன்ற நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையை முடிவுக்கு கொண்டு வந்து அலுவலர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் இதுபோன்ற ஒரு சட்டம் அமலுக்கு வந்தால் ஊழியர்களுக்கு பெரு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

எலான் மஸ்க்

சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு திரும்பாவிட்டால் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டிய நிலை வரும் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில் நெதர்லாந்து நாட்டில் இந்த மசோதா அந்நிறுவனத்திற்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது

Related Articles

Leave a Comment