தமிழக வரலாறும், காவல் துறையும் :
காவல் நிலையங்களில் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்ற செய்தியை பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். குறிப்பாக சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பத்மினியும், தளி காவல் நிலையத்தில் கல்பனாவும், சுமதியும், புதுச்சேரி காவல் நிலையத்தில் அத்தியூர் விஜயாவும்,முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் வசந்தாவும், கற்பழிக்கப்பட்டார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டிருக்கிறோம். முதன்முதலாக தமிழக வரலாற்றில் நீதிமன்றக் காவலில் ரீட்டாமேரி என்ற 19 வயது நிறைந்த பெண் கற்பழிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி தமிழகத்தையே நிலைகுலைய வைத்திருக்கிறது.
ரீட்டாமேரியும், அவரது குடும்பமும் :
சென்னை திருவெற்றியூர் எழத்துக்காரன் தெருவைச் சேர்ந்த லீலாவதி-சௌந்தரராஜன் தம்பதியரின் கடைசி மகள்தான் ரீட்டாமேரி, வயது 19. இவருக்கு 4 சகோதரிகளும், 2 சகோதர்களும் உள்ளனர். தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்த ரீட்டாமேரி தனது சகோதரர் சாமுவேல் குடும்பத்தாருடன் தனது தாயாரோடு வசித்து வந்தார். ஈரோட்டில் இருக்கும் தனது மூத்த சகோதரி கீதா அவர்களை சந்திப்பதற்காக ஈரோட்டிற்கு தனது தாயார் லீலாவதியோடு சென்றிருக்கிறார். அங்கே தனசு சகோதரி கீதா மிகவும் வறுமையான சூழலில் தனது குடும்பத்தை நடத்துவதைக் கண்டு மனமுடைந்து மீண்டும் சென்னைக்கு திரும்பலாம் என்று தன் தாயாரோடு பேசி திட்டமிட்டிருக்கிறார். சென்னைக்கு புறப்படுவதற்கு முன்னால் தன் சகோதரி கீதாவோடு சிறு வாய்த்தகராறு ஏற்பட்டது. எனவே தனது சகோதரியுடன் கோபித்துக்கொண்டு தன் காலிலிருந்த வெள்ளிகொலுசை விற்று சென்னைக்கு செல்லலாம் என்று தன் தாயிடம் கூறிவிட்டு ஈரோட்டிலுள்ள கடைவீதிக்குச் சென்றிருக்கிறார். அங்கே ரீட்டாவை நோட்டமிட்ட புரோக்கர் ஒருவன் ரீட்டாவோடு மெல்ல பேச்சுக் கொடுத்து வேலை வாங்கித் தருவதாக கூறி ரீட்டாவை கடத்திச் சென்று கவிதா, ஈஸ்வரி என்ற விபச்சார விடுதி நடத்துனரிடம் சேலம் ஆத்தூரிலுள்ள விபச்சார விடுதியில் ரீட்டாவை விற்பனை செய்திருக்கிறான்.
மேலும் தகவல் அறிய: