மத்திய அரசின் பிரகதி என்ற பெண் கல்வி உதவித்தொகை திட்டத்தில் கீழ் உயர் கல்வி படிக்கும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். உயர் கல்வி நிறுவனமான ஏஐசிடிஇ சார்பில் பொறியியல் பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இந்த திட்டத்தில் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் முக்கிய அம்சங்கள்:
வருடத்திற்கு 4000 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதில் 2000 டிகிரி பிரிவுக்கும் 2000 டிப்ளமோ மாணவிகளுக்கும் வழங்கப்படும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மாணவிகள் தொழில்நுட்ப கல்வி கற்பவராக இருக்க வேண்டும்.
AICTE-யால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் முதல் ஆம் ஆண்டு டிகிரி/டிப்ளமோ படித்துக்கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். கல்வியில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் உதவித்தொகைக்கு மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கல்லூரி கட்டணமாக ரூ. 30,000 அல்லது கட்டணத் தொகை வழங்கப்படும். மேலும் ரூ. 2000 ஒவ்வொரு வருடமும் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். ஒரு வேலைக் கல்லூரி கட்டண சலுகை பெற்றிருந்தால் ரூ.30,000/- இதர தேவைகளுக்காக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க யாரெல்லாம் தகுதியானவர்கள்:
ஒரே குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மேலும் குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு:
பிரகதி திட்டத்தில் கீழ் உதவித்தொகை வழங்க இட ஒதுக்கீடு உள்ளது. அதன் படி 15% SC பிரிவினருக்கும்,7.5% ST பிரிவினருக்கும் மற்றும் 27% OBC மற்றும் இதர பிரிவினருக்கும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் :
- 10,12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- குடும்ப வருமான சான்றிதழ்
- கல்லூரியில் டிகிரி அல்லது டிப்ளமோ சேர்ந்ததிற்கான அட்மிஷன் கடிதம்
- கல்வி நிலைய தலைவர்/முதல்வர் அளித்த சான்றிதழ்
- கட்டண ரசீது
- ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு
- சாதி சான்றிதழ்
- ஆதார் கார்டு
- பெற்றோர்கள் அளித்த பிரகடனம்
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பிரகதி அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அனைத்து சான்றிதழ்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதார்களில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்களுக்கு உதவித்தொகை வங்கிக் கணக்கில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க : https://www.aicte-pragati-saksham-gov.in/