அஜித்தை விட விஜய் தான் பெரிய ஸ்டார் என தயாரிப்பாளர் தில் ராஜு கூறியது சினிமா ரசிகர்களை விவாதிக்க வைத்திருக்கிறது.
வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் துணிவு படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி மாதம் 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படம் தெலுங்கிலும் வரவிருக்கிறது. வாரிசு படத்தை பிரபல டோலிவுட் தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்திருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தில் ராஜு பேசியது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்த பொங்கலுக்கு வாரிசு தனியாக வரவில்லை. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் துணிவு படமும் ஜனவரி 12ம் தேதி தான் ரிலீஸாகிறது. அந்த படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் தமிழகத்தில் விநியோகம் செய்கிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு கூடுதல் ஸ்கிரீன் கேட்க சென்னை செல்வதாக தில் ராஜு கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் அஜித்தை விட விஜய் தான் பெரிய ஸ்டார். அப்படி இருக்கும்போது அந்த மாநிலத்தில் இருக்கும் 800 ஸ்கிரீன்ஸில் 400 தான் வாரிசு படத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சரி அல்ல. அதனால் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து எங்கள் படத்திற்கு கூடுதல் ஸ்கிரீன்ஸ் கேட்கப் போகிறேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் தில் ராஜு.
வாரிசு படத்திற்கு கூடுதல் ஸ்கிரீன் வேண்டும் என்று பிசினஸ்மேனான தில் ராஜு நினைப்பதில் தவறு இல்லை. பணம் போட்டிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட அஜித் குமாரை தாழ்த்திப் பேசியது தவறு. வாரிசு படத்திற்கு வேறு யாரும் சூனியம் வைக்க வேண்டாம். அவர்களே வைத்துக் கொள்கிறார்கள். தில் ராஜு பேசியது தவறு. யாரையும் தாழ்த்திப் பேசாமல் கூடுதல் ஸ்கிரீன்ஸ் கேட்டிருக்கலாம் என்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.
தில் ராஜு கூறியது தவறு என்று சினிமா ரசிகர்கள் கூறுவதை பார்த்த விஜய் ரசிகர்கள் தெரிவித்திருப்பதாவது, எங்கள் தளபதி தான் தமிழகத்தின் நம்பர் ஒன் ஸ்டார். அது தான் நிஜம். உண்மையை சொல்ல தில் ராஜு தயங்க வேண்டியது இல்லை. அவர் சொன்னது பொய் என்று நினைப்பவர்கள் பிற நடிகர்களின் வசூல் விபரங்களை பார்க்கவும். விஜய்ணா தான் தொடர்ந்து வசூல் கொடுத்து வருகிறார் என்கிறார்கள்.
அஜித் குமாரை வைத்து மூன்று படங்களை தயாரித்துவிட்டார் போனி கபூர். ஒரு முறை கூட அவர் விஜய்யை தாழ்த்திப் பேசியது இல்லை. பொங்கலுக்கு துணிவு வந்தால் அதை துணிவுடன் எதிர்கொள்வதை விட்டுவிட்டு அஜித்தை இப்படி தாழ்த்திப் பேசுவது சரியா மிஸ்டர் தில் ராஜு?. போனி கபூர் அப்டேட்ஸ் கொடுக்காமல் இருந்தாலும் யாரையும் இப்படி எல்லாம் பேச மாட்டார் என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.